எமது நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கு சிலர் முயற்சி: டலஸ் அழகப்பெரும!
30 ஆண்டுகளாக யுத்தம் நடைபெற்ற இலங்கையில் தற்பொது சமாதானத்தின் நன்மைகள் கிடைக்கப் பெற்று வரும் நிலையில் எமது நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கு சிலர் முயற்சித்து வருவதாக இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாது இச்சக்திகள் நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் எமது நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் புலிகள் நாட்டில் காணப்பட்ட மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளை மேற்கொண்டபோதும் அந்த முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை. குறிப்பாக தலதா மாளிகை மீதான தாக்குதல், அரந்தலாவை தாக்குதல், காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல் போன்ற பல தாக்குதுல்களை புலிகள் மேற்கொண்டிருந்த போதும் இந்த தாக்குதல்கள் தொடர்பில் எவரும் கவனம் செலுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் 2005ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டிருக்காவிட்டால் முஸ்லிம் தலைவர்களின் நிலைமை என்னவாக இருந்திருக்கும் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
0 comments :
Post a Comment