அமைச்சரவையிலிருந்து யாருக்கும் எந்நேரமும் போகலாம் வரலாம்...! - ஜனாதிபதி
தான் அமைச்சரவையிலிருந்து யாரையும் விராட்டாது விட்டாலும், யாருக்கும் எந்தநேரமும் போய்விட முடியும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலியில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் காலி மாவட்ட பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“அமைச்சரவையிலுள்ள யாரையும் நான் விரட்ட மாட்டேன். யாரேனும் விலகிச் செல்ல வேண்டும் என்றால் எவ்வித எதிர்ப்பையும் நான் காட்ட மாட்டேன். போகலாம்.. வர வேண்டும் என நினைத்தால் வரலாம்… எங்களுக்கு சலூன் கதவொன்று உள்ளது. அதனால் வரவும் போகவும் முடியும்”
(கேஎப்)
0 comments :
Post a Comment