ஜெனீவா மாநாட்டின் ஆசிய பசுபிக் பிராந்திய பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றி!
ஜெனீவா மாநாட்டின் ஆசிய பசுபிக் பிராந்திய பிரதி நிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை, பெரிதும் வெற்றியளித்தாக, இலங்கை பிரதிநிதிகள் தெரிவித்துள் ளனர். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் கடந்த 5 வருடங்களுக்குள் இலங்கை அடைந்துள்ள முன்னேற் றங்கள், அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அவர்களுக்கு விளக்கமளித்தார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள், எல்.ரி.ரி.ஈ முன்னாள் உறுப்பினர்களுக்கு, புனர்வாழ்வளிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அங்கு விளக்கமளிக்கப்பட்டது. மூன்று தசாப்தகால யுத்தத்தை இல்லாதொழித்து, மக்களுக்கு சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திய இலங்கைக்கு சர்வதேசம் வழங்குகின்ற பரிசா இந்த ஜெனீவா யோசனை என, அமைச்சர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக ஜெனீவாவிலிருந்து எமது நிலையத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹானாமஹேவா கருத்து தெரிவித்தார்.
நாடுகளில் காணப்படுகின்ற நிலைமைகளை விட, ஐக்கிய நாடுகள் ஸ்தாபன விசேட பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைகள் தொடர்பாகவே, இத்தினங்களில் ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் கலந்தாலோசிக்கப்படுகின்றன. துன்புறுத்தல்கள் தொடர்பாக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மனித உரிமை செயற்பாடுகள் அத்துடன் உணவு தொடர்பாகவும், அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அத்துடன் சூழல் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாகவும் அபிவிருத்திகள் முன்வைக்கப்பட்டன.
தற்போது இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பாக எந்தவித கருத்துகளும் முன்வைக்கப்படவில்லை. ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகள் தொடர்பாக அந்த நாடுகள் தற்போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட போதிலும், எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள யோசனைகளின் போது, செயற்பட வேண்டிய விதம் தொடர்பாகவும், இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது
0 comments :
Post a Comment