நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் முற்றுகைப் பேராட்டம் !
யாழ். நல்லூர் பிரதேச சபையில் அண்மையில் வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தின் போது முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டு இன்று(12.03.2014) காலை முதல் பிரதேச சபையின் ஊழியர்கள் பிரதேச சபையின் நுழைவாயிலை மறித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலை 8.30 மணி முதல் பிரதேச சபையின் நுழைவாயிலை மூடி சபையின் உத்தியோகஸ்தர்கள் எவரும் உட்செல்லாதவாறு சிற்றூழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் நல்லூர் பிரதேச சபையினால் வழங்கப்பட்ட சிற்றூழியர்களுக்கான நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக தெரிவித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சபையின் செயற்பாடுகள் அனைத்தும் முடங்கியுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறது இருப்பதற்காக காவலில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment