மதுபாவனையை ஒழிப்போம்” விழிப்புணர்வு பேரணியும் வீதி நாடகமும்!
தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு போதையற்ற சமூகத்தினை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி மற்றும் வீதி நாடகங்களை இன்று(12.03.2014) காலை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களம் நடாத்தியது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார காரியாலய முன்றிலில் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தலைமையில் இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன் இதில் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் கே.முருகானந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள்,பொதுச்சுகாதார பரிசோதகர்கள், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்கள அதிகாரிகள்,தாதியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பிரதான வீதியூடாக பேரணி சென்று மட்டக்களப்பு நகரின் மத்தியில் மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகில் மதுபோதையினால் ஏற்படும் தீமை தொடர்பில் விழிப்புணர்வு வீதி நாடாம் நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பேரணி மட்டக்களப்பு பஸ் நிலையத்தினை சென்றடைந்து அங்கு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களத்தினை வந்தடைந்தது.
குறித்த இந்த பேரணியின் போது மதுபோதையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கையேடுகள் விநியோகிக்கப்பட்டதுடன் பாதகைகளையும் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர்.
0 comments :
Post a Comment