Thursday, March 27, 2014

நவிபிள்ளையின் அறிக்கையும் அவரது நிலைப்பாடும், தவறான தகவல்களை ஆதாரங்களாகக் கொண்டுள்ளன! - ரவிநாத்

பாகிஸ்தான், கியூபா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவு!

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில் இலங்கை குறித்து அமெரிக்கா தலைமை யிலான நாடுகளினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் மீது இன்றும் விவாதம் இடம்பெறவுள்ளது. நேற்றைய அமர்வின்போது ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளையினால் இலங்கை குறித்த அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



ஒரு நாட்டில் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்காக எடுக்கப்படுகின்ற நடவடிக்ககைள், அந்த நாட்டின் சம்மதத்துடனேயே எடுக்கப்பட வேண்டும் என்றும் இல்லாவிட்டால், நல்லிணக்க நடவடிக்கைளில் நுண்ணிய சமநிலை பாதிக்கப்படும் என்றும் இலங்கைப் பிரதிநிதி ஐ.நாவில் வாதிட்டுள்ளார்.

நவிபிள்ளையின் அறிக்கையும் அவரது நிலைப்பாடும் தவறான தகவல்களை ஆதாரங்களாகக் கொண்டிருப்பதாக பேசிய ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, இலங்கையில் வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக கிளிநொச்சியில் நடந்த அண்மைய சம்பவங்களும், பயங்கரவாதிகள் மீண்டும் ஒன்று கூடுவதாக கிடைத்துள்ள ஆதாரங்களும் முன்னாள் போராளி ஒருவர் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவமும் எங்களின் கவலைகளை மேலும் உறுதிப்படுத்துகின்றன எனவும், வெளிநாட்டிலிருந்து இயங்கும் விடுதலைப்புலிகளின் விரிவான வலையமைப்பு ஒன்றின் மூலம் இந்த நடவடிக்கைகள் நடந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாகிஸ்தான், கியூபா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கை சார்பில் குரல் கொடுத்தன. இலங்கை அதன் தேசிய சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்கு சீனா ஆதரவளிக்கிறது´ என்றார் சீனப் பிரதிநிதி. இலங்கையின் உள்விவகாரங்களில் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையரின் அறிக்கை நேரடியாக தலையிடுவதாகவும், மனித உரிமைகள் விவகாரம் சில நாடுகளால் தங்களின் பூகோள அரசியல் தேவைக்காக பயன்படுத்தப்படுவதாகவும் ரஷ்யா உள்ளிட்ட அணியினர் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com