Saturday, March 29, 2014

இந்திய மீனவக்கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டார் மஹிந்தர். ஐ.நா புறக்கணிப்புக்கு கைமாறு!

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியாவால் புறக்கணிக்கப்பட்டமை பல தரப்பினராலும் பல்வேறு கோணத்தில் விவாதிக்கப்படுகின்றது. ஆனால் இந்தியாவின் இம்முடிவானது இலங்கைக்கு உற்சாகம் அளிப்பாதாக உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் இந்த சிறந்த முடிவுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, கடல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 98 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி 98 தமிழக மீனவர்களும் விடுவிக்கப்படுவார்கள். இலங்கை பாதுகாப்பில் உள்ள அவர்களது 62 படகுகளும் ஒப்படைக்கப்படும். ஜனாதிபதியின் உத்தரவு அட்டர்னி ஜெனரல் துறை மற்றும் மீன்வள அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் மீனவர்கள் விடுதலை தொடர்பான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்வார்கள் என்றும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment