ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மேல் மற்றும் தென் மாகாண சபைகளில் அமோக வெற்றி! - (முழு விபரம் இணைப்பு)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மேல் மற்றும் தென் மாகாண சபைகளில் அமோக வெற்றியீட்டியுள்ளது. தெளி வான பெரும்பான்மையுடன் இரு மாகாண சபைகளின் அதிகாரத்தை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. 13 இலட்சத்து 63 ஆயிரத்து 675 வாக்குகளை பெற்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, மேல் மாகாண சபையை கைப்பற்றியுள்ளது. செலுத்தப்பட்ட மொத்த வாக்குகளில் 53.3 சதவீதத்தை கூட்டமைப்பு பெற்றுள்ளது.
இதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மேல் மாகாண சபையில் 56 ஆசனங்களை பெற்றுள்ளது. 6 இலட்சத்து 79 ஆயிரத்து 682 வாக்குகளை பெற்று, ஐக்கிய தேசியக் கட்சி 28 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இது செலுத்தப்பட்ட மொத்த வாக்குகளில் 26.59 சதவீதமாகும்.
ஜனநாயகக் கட்சி 2 இலட்சத்து 3760 வாக்குகளை பெற்றுள்ளது. இது 7.9 சதவீதமாகும். அக்கட்சி 9 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஜே.வி.பி. ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 208 வாக்குகளை பெற்று, 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இக்கட்சி 6.1 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணி மேல் மாகாண சபையில் 51 ஆயிரம் வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 49 ஆயிரத்து 515 வாக்குகளை பெற்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 15 ஆயிரத்து 491 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது.
தென் மாகாண சபையில் உள்ள 53 ஆசனங்களில் 33 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. 6 இலட்சத்து 99 ஆயிரத்து 408 வாக்குகளை பெற்று கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியது. மொத்த வாக்குகளில் 58 சதவீத வாக்குகளை இக்கட்சி பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 3 இலட்சத்து 10 ஆயிரத்து 431 வாக்குகளை பெற்றுள்ளது. செலுத்தப்பட்ட மொத்த வாக்குகளில் 25.75 சதவீத வாக்குகளை பெற்று 14 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 31 வாக்குகளை பெற்று ஜே.வி.பி. 5 ஆசனங்களை பெற்றுள்ளது. அக்கட்சி 9.5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. 75 ஆயிரத்து 532 வாக்குகளை பெற்று ஜனநாயகக் கட்சி 3 ஆசனங்களை கைப்பற்றிய நிலையில், செலுத்தப்பட்ட மொத்த வாக்குகளில் 6.2 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது.
மேல் மற்றும் தென் மாகாண சபைகளில் சகல மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே வெற்றியீட்டியுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4 இலட்சத்து 43 ஆயிரத்து 83 வாக்குகளை பெற்றுள்ளது. செலுத்தப்பட்ட மொத்த வாக்குகளில் 45.33 வாக்குகளை பெற்று 18 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 2 இலட்சத்து 85 ஆயிரத்து 38 வாக்குகளை பெற்று ஐக்கிய தேசியக் கட்சி 12 ஆசனங்களை கொழும்பு மாவட்டத்தில் கைப்பற்றியுள்ளது. செலுத்தப்பட்ட மொத்த வாக்குகளில் 29.21 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது.
ஜே.வி.பி. 74 ஆயிரத்து 437 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. செலுத்தப்பட்ட மொத்த வாக்குகளில் 7.62 சதவீத வாக்குகளை இக்கட்சி பெற்றுள்ளது. ஜனநாயகக் கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 525 ஆகும். செலுத்தப்பட்ட மொத்த வாக்குகளில் 7.3 சதவீத வாக்குகளை பெற்று, அக்கட்சி 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாவட்டத்தில் 44 ஆயிரத்து 156 வாக்குகளை பெற்று, 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 26 ஆயிரத்து 163 வாக்குகளை பெற்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம், 15 ஆயிரத்து 491 வாக்குகளை பெற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் தலா ஒரு ஆசனம் வீதம் கைப்பற்றியுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 13 ஆசனங்களை பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளது. 3 இலட்சத்து 31 ஆயிரத்து 924 வாக்குகளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றுள்ளது. ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 924 வாக்குகளை பெற்று, ஐக்கிய தேசியக் கட்சி 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஜனநாயகக் கட்சி 43 ஆயிரத்து 685 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 5 இலட்சத்த 82 ஆயிரத்து 668 வாக்குகளை பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளது. இங்கு அக்கட்சி 23 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 2 இலட்சத்து 49 ஆயிரத்து 220 வாக்குகளை பெற்றுள்ளது. இக்கட்சி இங்கு 10 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 88 ஆயிரத்து 557 வாக்குகளை பெற்று, ஜனநாயகக் கட்சி 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் ஜே.வி.பி. 56 ஆயிரத்து 405 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 17 ஆயிரத்து 296 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.
மாத்தறை மாவட்டத்தின் மொத்த முடிவுகளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2 இலட்சத்து 31 ஆயிரத்து 102 வாக்குகளை பெற்று, 10 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 96 ஆயிரத்து 290 வாக்குகளை பெற்று 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஜே.வி.பி. 29 ஆயிரத்து 158 வாக்குகளை பெற்று இரண்டு ஆசனங்களையும், ஜனநாயகக் கட்சி 20 ஆயிரத்து 501 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள 4 தேர்தல் தொகுதிகளிலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதிகூடிய வாக்குகளை பெற்று இம்மாவட்டத்தை கைப்பற்றியுள்ளது. ஹம்பாந்தோட்டையில் செலுத்தப்பட்ட மொத்த வாக்குகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 680 வாக்குகளை பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 79 ஆயிரத்து 829 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. ஜே.வி.பி. 29 ஆயிரத்து 345 வாக்குகளை பெற்றுள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும், ஜே.வி.பி. 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
காலி மாவட்ட மொத்த முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2 இலட்சத்து 93 ஆயிரத்து 619 வாக்குகளை பெற்று 13 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஒரு இலட்சத்து 34 ஆயிரத்து 305 வாக்குகளை பெற்று ஐக்கிய தேசியக் கட்சி 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஜனநாயகக் கட்சி 45 ஆயிரத்து 484 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை காலி மாவட்டத்தில் கைப்பற்றியுள்ளது.
0 comments :
Post a Comment