விதி முறைமைகளை மீறியுள்ள பிரேரணையை தோற்கடிக்க முஸ்லிம் நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும்!
ஐ. நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையானது மனித உரிமைப் பேரவையின் விதி முறைமைகளை மீறுவதாகவும் ஐ. நா மனித உரிமைப் பேரவையின் விசாரணை என்ற பெயரில் இலங்கை மீது சர்வதேச விசாரணையை மேற்கொள்ளும் முயற்சிகளை தோற்கடிக்க இலங்கைக்கு முஸ்லிம் நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும் என்று பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சரும் ஜெனிவா தூதுக்குழுவின்உ றுப்பினருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐ. நா மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணையானது நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தலாகும் என்றும் அமைச்சர் சமரசிங்க ஜெனிவாவில் நடத்திய உபகுழுக் கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவா மனித உரிமைப் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் உலக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் பிரதிநிதிகளை கடந்த வியாழக்கிழமை ஜெனிவாவில் சந்தித்து கலந்துரையாடியபோதே அமைச்சர் சமரசிங்க மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்புக்களின்போது யுத்தத்துக்குப் பின்னரான நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் சமாதானத்தை கட்டியெழுப்பவும் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் சமரசிங்க விளக்கமளித்துள்ளார்.
அமைச்சர் இந்த சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டில் மத உரிமை மற்றும் கருத்து உரிமை போன்றவை தொடர்பில் அரசியலமைப்பில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இலங்கை பல் மத மற்றும் பல மொழிகள்இ கலாசாரத்தை நீண்டகாலமாக கொண்ட நாடாகும்.
ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையில் மத விவகாரம் குறித்து தேவையற்ற முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க வேலைத்திட்டங்களை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளதுடன் அரசியல்மயமானதாக காணப்படுகின்றது. இதன் மூலம் அரசியல் நோக்கமே அடையப்பட முயற்சிக்கப்படுகின்றது என்றார்.
இதேவேளை முஸ்லிம் மக்களுக்கு எதிராக புலிகள் பாரிய மூர்க்கத்தனமான தாக்குதல்களை முன்னர் மேற்கொண்டதாகவும் வடக்கிலிருந்து முஸ்லிம் சிங்கள மக்களை வெளியேற்றியதாகவும் அமைச்சர் இந்த சந்திப்புக்களின்போது தெளிவுபடுத்தியுள்ளார்.
முன்னர் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான செயற்பாடுகள் தற்போது நல்லிணக்கத்தின் மூலம் சரி செய்யப்பட்டுவருகின்றது எனவும் முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின்போது அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment