ராஜிவ் கொலைகாரர்களை விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை - மத்திய அரசு சீற்றம்!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக் குடன் சம்பந்தப்பட்ட 7 பேரையும் விடுவிக்கும் அதிகாரம், தமிழக அரசுக்கு இல்லையென, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரினது தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் இரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைத்தது.
இதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டலின் கீழ், இம்மூவரும் மற்றும் ஏற்கனவே ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட நால்வர் உட்பட 7 பேரையும், தமக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் விடுதலை செய்வதாக, தமிழக அரசு அறிவித்தது.
இது குறித்து, இந்த 7 பேரையும் விடுவிக்கும் அதிகாரம், தமிழக அரசுக்கு இல்லையெனவும், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டுமெனவும், தமிழக அரசு கோரியது.
எனினும், மத்திய அரசோ, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்தது. இந்த வழக்கில் தமிழக அரசிற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்ய, மாநில அரசிற்கு அதிகாரம் உண்டு என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்தது.
இது தொடர்பாக பதிலளிக்க வேண்டுமென, மத்திய அரசாங்கத்திற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதன் பிரகாரம், உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்த மத்திய அரசு ராஜிவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதாக, சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.
இதில், இவர்கள் தங்களது மீதமுள்ள வாழ்நாளை சிறையில் தான் கழிக்க வேண்டும். இந்த வழக்கில் கொலையாளிகளை மன்னித்து விடுவிக்கும் அதிகாரம், தமிழக அரசிற்கு இல்லை. இதற்கு காரணம், மன்னிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment