Sunday, March 30, 2014

தென் மாகாணத்தின் மூன்று மாவட்டத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு வெற்றி!

தென் மாகாணத்தின் ஹம்பாந்தொட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மூன்று மாவட்டங்களின் முழுமையான பெறுபேறுகளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

இவற்றில் காலி மாவட்டத்தின், காலி தேர்தல் தொகுதியைத் தவிர, ஏனைய அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளதுடன் காலி தேர்தல் தொகுதியில் மட்டும் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றுள்ளது.

தென் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மொத்தமாக 6 லட்சத்து 99 ஆயிரத்து 408 வாக்குகளை பெற்றுள்ளது எனினும் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 8 லட்சத்து 4 ஆயிரத்து 71 வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த தேர்தலில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 200 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசிய கட்சி இந்த முறை 3 லட்சத்து 10 ஆயிரத்து 431 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் ஜே வி பி இம்முறை 1 லட்சத்து 9 ஆயிரத்து 32 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதே வேளை தென் மாகாண சபையில் புதிதாக போட்டியிட்ட ஜனநாயக கட்சி 75 ஆயிரத்து 532 வாக்குகளை இந்த முறை மொத்தமாக பெற்றுள்ளது.

No comments:

Post a Comment