ஆஸியில் இலங்கையரை குத்திக் கொலைசெய்த நபர் கைது!
அவுஸ்திரேலியாவில் இலங்கை வர்த்தகர் ஒருவர் மேற்கு சிட்னி பகுதியில் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். வீசாகீசன் எனப்படும் இலங்கையை சேர்ந்த தமிழ் வர்த்தகர் வீடுகள் காணிகளை வாங்கி விற்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இன்று காலை அவுஸ்திரேலிய நேரப்படி 7.45 அளவில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை தனது அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த குப்பைகளை வெளியில் கொட்டுவதற்காக வந்தபோது இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமக்கு கிடைத்த அவசர தொலைபேசி அழைப்பினை தொடர்ந்து தாம் கொலை இடம்பெற்ற இடத்திற்கு சென்ற போது வீசாகீசன் நெஞ்சு பகுதியில் கத்திக்குத்திற்கு உள்ளாகி இரத்த வெள்ளத்தில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோதும் அவரை காப்பாற்ற இயலவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.48 வயதான இலங்கையை சேர்ந்த இந்த வர்த்தகர் 20 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார். இவரது மனைவி தற்போது கர்ப்பமுற்று உள்ளதாகவும் அது அவர்களது முதல் குழந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த ஆஸி பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய 30 வயதான டுன்காப்பி என்ற நபரை பெண்டல் ஹில் நிலையத்தில் இருந்து குறைந்த ஒரு கிலோ மீற்றர் தொலைவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் உடனடியாக மனநல பரிசோதனைக்காக கம்பர்லேண்ட் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் தற்போது கொலை குற்றச் சாட்டின் பேரில் மேரிலேண்ட் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment