Sunday, March 30, 2014

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் ஆசிரியை காட்டுமிராணடித்தனம்!

வவுனியா நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ளது கலைமகள் மகாவித்தியாலயம். பிரபல்யமாக முன்னேறிவரும் இப் பாடசாலையில் சிறுவர் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகமா இடம் பெறுவதாகவும், ஊழல்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டாம் வகுப்பை சேர்ந்த மாணவன் ஒருவருக்கு ஆசிரியை ஒருவர் காட்டுமிராணடித்தனமாக அடித்து துன்புறுத்தியுக்கதாக தெரிவிக்கப்படுகின்றது. இப் பாடசாலையில் ஆரம்பப்பிரிவு வகுப்புக்களை பெற்றோர் கூட்டி சுத்தம் செய்ய வேண்டும் எனவும், பெற்றோர் வராத சந்தரப்பத்தில் அவர்களுடைய பிள்ளைகள் தாறுமாறாக தண்டிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு கடந்த புதன்கிழமை மாணவன் ஒருவனுடைய பெற்றோர் வேலை நிமித்தம் சுத்திகரிப்புக்குச் செல்லாததால் ஆசிரியை மாணவனை கடுமையாக அடித்துள்ளார். மாணவனின் கால்களில் நான்கு தழும்புகள் பதிந்துள்ளன. மாணவனிடம் இது பற்றி கேட்டபோது அடித்த அடையாளத்தை வீட்டில் காட்டுமாறும், அவ்வாறு காட்டினால்தான் அடுத்த முறை கட்டாயம் பெற்Nறூர் வருவர் என்றும் இரக்கமில்லாத முறையில் கூறியுள்ளார்.

குறித்த மாணவன் அடி தாங்க முடியாமல் மயங்கி வீழ்ந்துள்ளதாகவும் பின்பு மயக்கம் தெளிவுற்றதும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மாணவன் பெற்றோரால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின் பொலீஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக வலயக் கல்வி அதிகாரி எடுக்கும் முடிவு என்ன? பாடசாலை அதிபர் வழமை போன்று பொறுப்பற்ற பதில்களை கூறி இப்பிரச்சினையி;ல் இருந்து நழுவிச் செல்ல முற்படுகின்றார்.

இப் பாடசாலைக்கு ஆரம்பப் பிரிவுக்கு பெற்றோர் எவ்வித பிரச்சினைகளில் இருந்தாலும் சுத்தம் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந்த வகையில் ஒரு புற்றுநோயாளரும் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடுவதாக பெற்றோர் குழாம் தெரிவிக்கின்றது.

மேலும் பாடசாலை பற்றிய தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலை அபிவிருத்தி பணிக்காக என்று பெற்றோரிடம் பணம் வசூலிக்கப்படுகின்றது. 3000.00 ரூபாய் பெற்றுக்கொள்ளப்பட்டு 100.00 ரூபாய்க்கான பற்றுச்சீட்டே வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஊழல் நடப்பதாக கண்டுபிடிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் எடுக்கும் நடவடிக்கை என்ன?

பல பெற்றோர் இதற்கான ஆதாரங்களை எம்மிடம் கையளித்துள்ளனர். இதற்கு உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க தவறும் சந்தர்ப்பத்தில் ஆதாரங்கள் யாவும் பிரசுரிக்கப்படும்.

சித்தன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com