ஐ.தே.க வேட்பாளரின் மகன் மீது கூரிய ஆயுத தாக்குதல்!
ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை வேட்பாளர் கித்சிறி கஹடபிட்டியவின் மகன் மலித் கஹடபிட்டிய அங்கறுவாதொட முச்சந்தியில் நேற்றிரவு 11.30 அளவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது நேற்றைய தினம் கூட்டமொன்றுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு சென்றுகொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வருகைதந்த குழுவினர் வீதியை இடைமறித்து மலித் கஹடபிட்டிய மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நடத்தியதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த அவர் ஹொரனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதே வேளை குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment