ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மேலும் சில விமான பாகங்கள்? - பிரான்ஸ் செயற்கைக்கோள் கண்டுபிடித்தது.
ஆஸ்திரேலியாவை ஒட்டிய தெற்கு இந்தியப் பெருங்கடலில் மேலும் சில உடைந்த பாகங்கள் மிதப்பதை பிரான்ஸ் செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. எனினும் விமானத்தின் எந்தப் பாகமும் இதுவரை மீட்கப்படாத தால் எதையும் உறுதியாகக் கூற முடியாது என்று ஆஸ்திரேலிய கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஆஸ்திரேலியா வெளியிட்ட செயற்கைக் கோள் புகைப்படத்தில் இரண்டு உடைந்து துண்டுகள் மிதப்பதாகக் கூறப்பட்டது. அவற்றை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய செயற்கைக்கோள் சுட்டிக்காட்டிய இடத்தில் இருந்து 120 கி.மீட்டர் தொலைவில் 74 அடி நீளம் 43 அடி அகலம் கொண்டு மற்றொரு உடைந்த துண்டு மிதப்பதை சீன செயற்கைக்கோள் கண்டுபிடித்தது.
அதே பகுதியில் மேலும் சில உடைந்த துண்டுகள் மிதப்பது பிரான்ஸ் செயற்கைக்கோள் புகைப்படங்களில் பதிவாகி யுள்ளது. அந்தப் படங்கள் ஆஸ்திரேலிய கடற்படைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுவரை கிடைத்துள்ள செயற்கைக்கோள் ஆதாரங்களின் அடிப்படையில் சம்பவ கடல் பகுதிக்கு கூடுதல் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆஸ்தி ரேலியா, நியூசிலாந்து, சீனா, அமெரிக்க போர் விமானங்களுடன் இந்திய கடற்படையைச் சேர்ந்த பி8 போர் விமானம், விமானப் படையைச் சேர்ந்த சி-130ஜே போர் விமானம் ஆகியவையும் தேடுதல் பணியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தன.
கடலில் மிதந்த மரப்பெட்டி, பெல்ட்டுகள்
நியூசிலாந்தின் பி3 ஒரியன் போர் விமான பைலட், குறிப்பிட்ட பகுதியில் பயணிகளின் உடைமை களை வைக்க பயன்படுத்தப்படும் மரப்பெட்டி மற்றும் பல்வேறு வண்ணங்களில் பெல்ட்டுகள் மிதப்பதை பார்த்துள்ளார்.
பொதுவாக போர் விமானங்க ளில் தேடும்போது மேலோட்டமாக மட்டுமே கண்காணிக்க முடியும். எனவே சம்பவ பகுதிக்கு போர்க் கப்பல்கள் விரைந்துள்ளன. இப் போதைய நிலையில் சில சரக்கு கப்பல்களும் ஆஸ்திரேலிய கடற் படையைச் சேர்ந்த சக்சஸ் என்ற போர்க்கப்பலும் மட்டுமே சம்பவ பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன், சீனா அனுப்பிய போர்க் கப்பல்கள் சம்பவ இடத்தை நெருங்கியுள்ளன. அந்தக் கப்பல்களும் இணையும் போது தேடுதல் எல்லை விரிவு படுத்தப்படும் என்று தெரிகிறது.
தேடுதல் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் நிருபர்களிடம் கூறியபோது, உறுதி யான பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதால் விமானத்தை தேடும் பணியில் புதிய நம்பிக்கை பிறந் துள்ளது என்றார்.
இமாலய தேடுதல் பணி
மலேசியாவின் 2 போர் விமானங்கள், 6 போர்க்கப்பல்கள், ஆஸ்தி ரேலியாவின் 3 போர் விமானங்கள், ஒரு போர்க் கப்பல், ஒரு சரக்கு கப்பல், நியூசிலாந்தின் ஒரு போர் விமானம், அமெரிக்காவின் ஒரு போர் விமானம், சீனாவின் 2 போர் விமானங்கள், 9 போர்க்கப்பல்கள், 2 சரக்கு கப்பல்கள், 4 ஹெலிகாப்டர்கள், இந்தோனேசி யாவின் 3 போர் விமானங்கள், 8 போர்க்கப்பல்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 போர் விமானங்கள், பிரிட்டனின் ஒரு போர்க் கப்பல், ஜப்பானின் 3 போர் விமானங்கள், இந்தியாவின் 2 போர் விமானங்கள், தென்கொரியாவின் 2 போர் விமானங்கள் ஆகியவை பல்வேறு பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலான போர் விமானங்களும் போர்க்கப்பல்களும் ஆஸ்திரேலிய கடற்பகுதிக்கு திருப்பிவிடப் பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் பியர்ஸ் விமான தளம் ஐ.நா. சபை விமான தளம் போன்று மாறியுள்ளது. அங்கு பல்வேறு நாடுகளின் போர் விமானங்கள் தரையிறங்கியுள்ளன.
கருப்புப் பெட்டி கண்டுபிடிக்க புதிய உத்தி
ஆஸ்திரேலிய விமானப் படை சார்பில் சம்பவ கடல் பகுதியில் ரேடியோ அலைகளை வெளியிடும் மிதவைகள் வீசப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் தொலைதூர திறன் மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.
தற்போது அமெரிக்காவிடம் மட்டுமே 6000 அடி ஆழத்தில் உள்ள பொருள்களைக் கண்டறியும் சோனார் பயோ கருவி உள்ளது. அந்த மிதவைக் கருவிகளைப் பயன்படுத்தினால் மட்டுமே கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்க முடியும் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.
சிறிய நீர்மூழ்கிகளை பயன்படுத்த முடிவு
மேலும் கடலுக்கு அடியில் தேடும் சிறிய ஆளில்லா நீர்மூழ்கிகளை தேடுதல் பணியில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஜெர்மனியில் இருந்து சிறப்பு நிபுணர்கள் ஆஸ்தி ரேலியாவுக்கு சென்றுள்ளனர். செயற்கைக்கோள்கள் அடை யாளம் காட்டியுள்ள பகுதிக்கு மிக அருகில் அன்டார்டிகா உள்ளது. எனவே பனிக்கட்டிகளை உடைக்கும் அதிநவீன கப்பலை சீன கடற்படை அனுப்பி வைத்துள்ளது.
0 comments :
Post a Comment