கிழக்கில் காணிகளை தாம் நினைத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கிறார்கள் அமைச்சர்கள்!
கிழக்கு மாகாண முஸ்லிம் அமைச்சர்கள் பலர் அந்த மாகாணத்திலிருந்து ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை அரசியல் நட்புக்களிடையே பகிர்ந்தளித்து, பாரிய அளவு காணிகளை கொள்ளையிடுவதாகவும் அதற்கு எதிராக பிரதேச செயலாளர்கள் செயற்படாமல் கண்மூடியிருப்பதாகவும் காணித் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.
அரசியல்வாதிகளின் இவ்வாறான காணி கொள்ளையிடுதல் தொடர்பில் பிரதேச செயலாளர்கள் கண்டுகொள்ளாதிருப்பதன் காரணம், அவர்கள் அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக நட்பு பூண்டிருப்பதனாலாகும் எனவும், இதனால் காணித் திணைக்களம் பாரிய பிரச்சினைகள் பலவற்றுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்களில் இடம்பெறும் காணி அபகரிப்பினை பிரதேச செயலாளர்களுக்கு நிறுத்த முடியாதுவிட்டால் அவர்கள் அவ்விடயம் தொடர்பில் காணித் திணைக்களத்திற்கோ, ஏனைய நிறுவனங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆயினும், இதுவரை இதுதொடர்பில் எந்தவொரு அறிக்கையோ, முறைப்பாடோ செய்யப்படவில்லை என திணைக்களப் பேச்சாளர் தெரிவித்தார்.
யுத்தக் காலப் பிரிவில் தங்கள் காணிகளை விட்டுச் சென்ற அப்பாவிச் சனங்களின் காணிகளும், பாதுகாக்கப்பட்ட ஏனைய இடங்களையும் அமைச்சர்கள் தங்களது சொத்தாக நினைத்து பகிர்ந்தளிக்கப்படுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment