பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டிய இலங்கைக்கு, சர்வதேசம் வழங்கும் பரிசு, ஜெனீவா பிரேரணையா? மஹிந்த
மூன்று தசாப்தகால பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி, மக்களுக்கு சுதந்திரமாக வாழ்வதற்கு வழியமைத்துக் கொடுத்த இலங்கைக்கு, சர்வதேசம் வழங்கும் பரிசு, ஜெனீவா பிரேரணையா என, அமைச்சர் மஹிந்த சமர சிங்க, சர்வதேசத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெனீவா மாநாட்டின் ஆசிய பசுபிக் பிராந்திய பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை, பெரிதும் வெற்றியளித்தாக, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் கடந்த 5 வருடங்களுக்குள் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அவர்களுக்கு விளக்கமளித்தார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள், எல்.ரி.ரி.ஈ முன்னாள் உறுப்பினர்களுக்கு, புனர்வாழ்வளிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அங்கு விளக்கமளிக்கப்பட்டது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தி, சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.
மூன்று தசாப்தகால யுத்தத்தை இல்லாதொழித்து, மக்களுக்கு சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திய இலங்கைக்,கு சர்வதேசம் வழங்குகின்ற பரிசா இந்த ஜெனீவா யோசனை என, அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இதன்போது கேள்வி எழுப்பினார்.
யுத்தம் முடிவடைந்த போதிலும், இலங்கை தொடர்ந்தும் சர்வதேச சமூகத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகிறது. மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கும், தேசிய செயற்பாட்டு திட்டங்கள் மற்றும் கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், நடவடிக்கைக்ள மேற்கொள்ளப்பட்டதுடன், அதன் முன்னேற்றங்கள் தொடர்பாக, ஆசிய பிராந்திய பிரதிநிதிகள் அறிவுறுத்தப்பட்டனர். இதுபோன்ற பணிகளை முன்னெடுக்கும் இலங்கைக்கு எதிராக இவ்வாறான யோசனைகளை முன்வைப்பது, ஒரு பயனுள்ள நடவடிக்கை அல்லவென்றும், அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஏனைய நாடுகள் இதனை தெளிவாக புரிந்து கொள்வதை போன்று, பாராட்டவும் வேண்டுமென அவர் தெரிவித்தார். இதுபோன்ற சவால்களை தோல்வியடையச் செய்வதே, அனைவரது பொது இலக்காக அமைய வேண்டுமென, அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஆசிய பிராந்திய உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment