இந்தத் தேர்தலில் ஐதேக வெல்லும்.. வெல்லும்.. வெல்லும்! - திஸ்ஸ அத்தநாயக்க
நாடெங்கிலும் தேர்தல் நடாத்தினால் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிக் கொடி நாட்டும் என்பது நன்கு தெரிந்ததனாலேயே அரசாங்கம் இருந்திருந்து தேர்தல்களை நடாத்துகின்றது என ஐ.தே.க வின் செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிடுகிறார்.
மகரவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட உரையாற்றும்போதே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு வருடத்தில் இரண்டு மூன்று தேர்தல்களை அரசாங்கம் நடாத்துவதற்குக் காரணம் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகும் எனச் சொன்னாலும், அரசாங்கம் முன்னணி அரசாங்கத்தை தக்க வைப்பதற்காகவே அவ்வாறு செய்கின்றது.
நாட்டை துன்பியலிலிருந்து பாதுகாக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமே முடியும். ஐதேக அரசாங்கத்திற்கு மட்டுமே முடியும்.
தேர்தல் ஆட்சியை மாற்றியமைக்கும் ஒன்று என்பதை மனதிற் கொள்ளுங்கள்.. ஐதேகவை வெற்றிபெறச் செய்ய திடசங்கற்பம் கொள்ளுங்கள்… நாங்கள் மக்கள் பலத்தின் மூலம் ஒரு சில மாதங்களுக்குள்ளேயே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்போம்…” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment