இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டியவர் நாமல் மட்டுமே! - ஹிருணிக்கா
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டியவர் நிச்சயமாக நாமல் ராஜபக்ஷவே என மேல் மாகாண சபை சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர குறிப்பிடுகிறார்.
வார இறுதி சிங்கள செய்திப் பத்திரிகையொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது, “எங்கள் அரசாங்கத்தில் நான் மிகவும் வெறுக்கின்ற ஒருவர், எனது தந்தையைக் கொலை செய்த துமிந்த சில்வா” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மைத்ரிபால மாமா, ராஜித்த மாமா, பீலிக்ஸ் மாமா, குமார வெல்கம மாமா போன்றோரை தாம் மிகவும் விரும்புவதாகவும் குறிப்பிடுகின்ற அவர், எதிர்க்கட்சியில் ரோஸி சேனாநாயக்காவையும், ஹரீன் பிரனாந்துவையும் விரும்புவதாக்க் குறிப்பிட்டுள்ளார்.
எது எவ்வாறாயினும், எதிர்க்கட்சியில் இருக்கின்றவர்களை விட ஆளும் கட்சியில்தான் தான் வெறுக்கின்ற அதிகமானோர் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment