தலைமறைவான விமானத்தில் பயணித்தவர்களின் தொலைபேசிகள் அலறுகின்றன...!
239 பயணிகளுடன் மலேசியாவின் கோலாம்பூரிலிருந்து சீனாவின் தலைநகர் பீஜிங் நோக்கிப் பயணித்தபோது, தலைமறைவாகிய விமானத்தில் பயணித்தவர்களின் கைத்தொலைபேசிகள் செயற்படுவதாக, அவர்களின் குடும்பத்தவர்கள் அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தி விமானம் தலைமறைவாகியிருப்பது தொடர்பிலான சிக்கல்கள் நீங்குவதற்கு வழிவகுத்துள்ளது.
சீன ஊடகங்கள் இதுபற்றித் தெளிவுறுத்தும்போது, உறவினர்கள் தங்களது காணமற்போனோரின் கைத்தொலைபேசிகளுக்கு அழைப்புகளை எடுத்த போது, அவை ரீங்காரமிடுவதாகவும், ஆனால், ஒருவரேனும் பதிலளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment