ஜெனீவாவில் எந்த தீர்மானம் எடுக்க பட்ட போதிலும் இந்த நாட்டு மக்களின் தீர்மானத்திற்கே தலைசாய்ப்போம்!
ஜெனீவாவில் எவ்வாறான முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும் மக்களின் தீர்ப்புக்கே தான் தலைசாய்க்க போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்வதை தவறாக கண்டு சிலர் ஜெனீவாவில் இவ்வாறான முடிவுகளை எடுத்த போதிலும் தனது அரசாங்கம் நாட்டு மக்களின் தீர்ப்புக்கே தலைசாய்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பிலியந்தல நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெலிவித்தார்.
பிலியந்தல நகரை சென்றடைந்த ஜனாதிபதியை மக்கள் வீதியின் இருமருங்கிலும் நின்று மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். நகர சபை மைதானத்தில் ஒன்று கூடிய பல இலட்சக்கணக்கான மக்களின் பலத்த கரகோசத்திற்கு மத்தியில் ஜனாதிபதி உரையாற்றினார். நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை ஒரு போதும் எவரலாறும் அசைக்க மு:டியாதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எமது அபிவிருத்திகளையும் அபிவிருத்தி திட்டங்களையும் தவறாக நோக்குகின்றார்கள். யுத்தம் புரிந்தமை தவறு என கூறுகின்றார்கள். இன்று நாம் ஜெனீவாவில் பதில் அளிக்கின்றோம். ஜெனீவாவில் எந்த தீர்மானம் எடுக்க பட்;ட போதிலும் இந்த நாட்டு மக்களின் தீர்மானத்திற்கே தலைசாய்ப்போம். அன்றைய தினம் அந்த மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என்பதில் எமக்கு சந்தேகம் இல்லை. எமக்கு இதனால் எந்தபிரச்சினையும் இல்லை.
இன்று அவர்களுக்கு ஒரு தலைமைத்துவம் இல்லை. முன்வருவதற்கு ஆளில்லை, ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்கின்றார்கள். இன்று மக்கள் முன்வந்து பேச முடியாத காரணத்தினால் எம்மை விரட்டியடிக்க முயற்சிக்கின்றார்கள். இன்று இந்த நாட்டில் என்ஜிஓ கும்பல்கள் இருக்கின்றன. வெளிநாட்டு பணத்தை கொண்டு வாழ்பவர்கள் இருக்கின்றனர். இது போன்றவர்கள் எம்மை பற்றி அறிக்கை சமர்ப்பிக்க முற்பட்டுள்ளனர். நீங்கள் நாட்டை பற்றி சிந்தியுங்கள் என தெரிவித்தார்.
இதேவேளை நாட்டுக்கு எதிரான ஜெனீவா சூழ்ச்சியை கண்டித்து நாட்டின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இலங்கைக்கு எதிராக ஜெனீவாமனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை கண்டித்து பண்டாரவளை நகரில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளனர்.
பண்டாரவளை விகாரையிலிருந்து சர்வமத தலைவர்கள் தலைமையில் பண்டாரவளை நகருக்கு வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான வாகன தரிப்பிடத்தில் எதிர்ப்பு கோசம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நகர் மத்தியில் கருமகாரியங்கள் நடத்தப்பட்டன. சர்வதேச சமூகத்திற்கு இல்ஙகை தொடர்பாக சரியான புரிந்துணர்வு கிடைக்கட்டுமென பிரார்த்தித்தனர்.
இதே நேரம் ஜெனீவா பிரேரணையை கண்டித்து நாட்டுக்கு ஆசிய வேண்டி பாத யாத்திரையொன்றும் வலஸ்முல்ல நகரில் நடைபெற்றது. வலஸ்முல்ல அசோகாராமயவில் சமய நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. சமய கிரியைகளை தொடர்ந்து ஏராளமான மக்கள் ஜெனீவா பிரேரணை கண்டித்த பாத யாத்திரையில் ஈடுபட்டனர்.
0 comments :
Post a Comment