Saturday, March 22, 2014

வன்னியில் கோபி தலைமையில் மீண்டும் புலிகள்: படைதரப்பு உசார் நிலையில்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் புலிகள் அமைப்பிற்கு இலங்கையில் உயிர்கொடுப்பதற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படும் கஜீபன் என்றழைக்கப்படும் கோபியை(31) பொலிஸார் தேடி வருவதாகவும் அவர் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு சன்மானம் பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இவர் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடையும் காலக்கட்டத்தில், இராணுவத்திடம் சரணடைந்து பூந்தோட்டம் முகாமிலிருந்து தப்பித்து வேலைவாய்ப்புக்காக கட்டார் சென்றுள்ளார்.

அதன் பின்னர் ஐரோப்பியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டு தமிழ் புலிகள் புலம்பெயர் அமைப்பின் தலைவர் என்று கூறப்படும் பெரும்நாயகம் சிவபரன் என்றழைக்கபடும் நெடியவனை நோர்வேயில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அவரிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு இலங்கைக்கு திரும்பிய அவர், புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவரான சண்முகலிங்கம் சிவசங்கர் என்றழைக்கப்படும் ஜயகுமார் பாலேந்திரன் (வயது 50) (பொட்டு அம்மானின் கீழ் பயிற்சிபெற்றவர்) கிளிநொச்சி தர்மபுரத்தில் விதவை பெண்ணொருவரின் வீட்டில் இருக்கும் போது பொலிஸார் கைது செய்வதற்கு சென்றிருந்த வேளையில் நூலிழையில் தப்பிவிட்டார்.

அவரை கைது செய்வதற்கு கி நிராயுதபாணியாக சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் வயிறு மற்றும் பாதத்தின் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு அந்தவீட்டிலிருந்து தப்பிச்சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோபியும் அந்த வீட்டில் இருந்ததாகவே பயங்கரவாத புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புலம்பெயர் புலிகள் கோபியின் உதவியுடன் வன்னியில் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்துள்ளனர். இதனால் பயங்கரவாதத்தை ஒழிக்க படைகளும் தாயார் நிலையில் உள்ளதாகவும் அவர்களை தேடியே சுற்றுவளைப்புக்கள் இடம்பெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2 comments :

Anonymous ,  March 22, 2014 at 8:42 PM  

முதலில், புலம்பெயர் தமிழ் அகதி கோமாளிகள் எந்த ஒருவனும் தமிழ் தாயகம் என்று கதைப்பதிற்கு தகுதி இல்லை. இதுவரைக்கும் ஒருதுளி இரத்தம் சிந்தாத எவனும் தமிழீழம் என்று நினைக்கவும் தகுதி இல்லை. அவ்வாறிருக்கும் போது தேவையற்ற செய்திகளுக்கு புலம் பெயர் கோழைகள் எவரும் கவலையடைய தேவையில்லை.

ஆர்யா ,  March 23, 2014 at 3:27 AM  

12 000 க்கு புனர் வாழ்வு கொடுத்தோம் என்று மார் தட்டினார்கள் , இப்ப புலி தன்ற வேலையை காட்ட வெளிக்கிட்டுது , புலியை பிடித்தால் அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்ப வேண்டும், அதை விடுத்து புனர் வாழ்வு , வேலை வாய்ப்பு என சலுகைகள் கொடுத்தால் பின் இப்படித்தான் செய்வார்கள் , " உண்ட கோப்பில் பேன்ட கூடம் ( ராஜீவ் கொலை ) " இவர்கள் , இனியாவது சம்பந்தப்பட்டவர்கள் கவனமெடுக்க வேண்டும், வேலையை கச்சிதமாக முடிக்க வேண்டும், புலி என எழுத்தில் கூட ஏழு யாரும் நினைக்க கூடாத மாதிரி.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com