அவதானம்! அவதானம்!மோசடிக்கரார்களின் கைகளில் சிக்கவேண்டாம்!
சுற்றுலா வீசாவை பயன்படுத்தி, இந்தியா அல்லது டுபாய் ஊடாக ஏனைய நாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்கென, செல்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பொது மக்களை கேட்டுள்ளது. தொழில் வாய்ப்புகளுக்கென வெளிநாடுகளு க்கு செல்ல எதிர்பார்த்துள்ளவர்கள், ஒரு சில மோசடிக்காரர்களினால் ஏமாற்றப்படுவதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனால் பெண்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உட்பட்டுள்ளனர்.
அத்துடன் இவர்களிடமிருந்து பல்வேறு வழிகளிலும் பணம் திரடப்பட்டுள்ளது. எவரேனும் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளுக்கென செல்வதாயின், தம்மை வெளிநாடுகளுக்கு அனுப்பும் முகவர் நிலையங்களிடம் குறித்த உடன்படிக்கைகள் காணப்படுகின்றதா, இது பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு முகவர் நிறுவனமா? இறுதியில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரம் இவர்களிடம் காணப்படுகின்றதா என்பது தொடர்பாக, பிரதானமாக கவனம் செலுத்த வேண்டும்.
இவை அனைத்தும் இல்லாத ஒரு நிறுவனத்தினூடாக வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளுக்கென செல்வதாயின் ஏற்படும் அசௌகரியங்களுக்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொறுப்புக்கூறாதென்பதை, கவனத்திற் கொள்ள வேண்டும்.
போதிய பயிற்சி, உயர்ந்தபட்ச வயதெல்லை, குடும்ப பின்னணி அறிக்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழில் வழங்குனர்களினால் வைப்பிலிடப்பட வேண்டிய ஆயிரம் அமெரிக்க டொலர் நிதி போன்ற விடயங்கள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பிற்கு செல்லும்போது, முக்கிய விடயங்களாக கருதப்படுகின்றன.
இந்த முக்கிய விடயங்களை கவனத்திற்கொள்ளாது, ஒர சில மோசடிக்காரர்கள் உப முகவர் நிலையங்களுடாக, ஊழியர்களை வெளிநாடுகளுக்கென அனுப்பி வைப்பதனால், அவர்கள் அந்நாடுகளில் பல்வேறு பிரச்சினைகளுக்கு உட்படு கின்றனர்.
இது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தி, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பிற்கென செல்லும்போது, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஆலோசனை களையும், வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ளுமாறு, பணியகம் பொது மக்களை கோரியுள்ளது. போலி ஆவணங்களை பயன்படுத்தி, வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்கென அனுப்பும் வர்த்தகம் தொடர்பான தகவல்களை011-2879900, 2879901 அல்லது 28799002 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடாக பொது மக்கள் அறிவிக்க முடியும்.
0 comments :
Post a Comment