இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் இந்தியா…
வாக்களிக்காமை தொடர்பில் மனக்கவலையுறுகிறது அமெரிக்கா!
அமெரிக்காவின் அநுசரணையின் கீழ் ஜெனீவா மனித உரிமை உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காமல் இருந்தது பற்றி அமெரிக்கா தனது மனக்கவலையைத் தெரிவித்துள்ளது.
வொஷிங்டனில் நேற்று முன்தினம் (29) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, அமெரிக்க அரசாங்கத் திணைக்கள உதவிப் பேச்சாளர் திருமதி மாரி ஹாப் இது பற்றி அறிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளாக தங்களது கூற்றுக்களுக்கு தலைசாய்த்து விருப்பு வாக்களித்த இந்தியா, இம்முறை வாக்களிக்காமல் தவிர்ந்து கொண்டது தொடர்பில் அமெரிக்கா மிகவும் மனத்துயர் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிய பிரேரணைகளின் பிரகாரம் முதற்றடவையாக கற்ற்றிந்த பாடத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள 2002 - 2009 காலப்பகுதிக்கு ஏற்புடையதாக, இலங்கையில் நடைபெற்றதாக்க் கூறப்படும் மனித உரிமை மீறல் உட்பட போர்க்குற்றங்கள் தொடர்பில் பூரண விசாரணை நடாத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர் அலுவலகம் கேட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment