பெருமளவு சட்ட விரோத மதுபானம் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் மீட்பு!
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது சட்ட விரோதமாக விற்பனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பெருமளவான மதுபான போத்தல்களை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது சட்ட விரோதமான முறையில் போத்தல்கள் அடைத்துக்கொண்டுசெல்லப்பட்ட மதுபான போத்தல்களை துறைநீலாவனைப்பகுதியில் வைத்து மீட்டுள்ளனர்.
இது தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 11ஆயிரம் மில்லி லீற்றர் மதுபானம் மீட்கப்பட்டுள்ளதுடன் களுவாஞ்சிகுடி நகரில் பாவனைதிகதி முடிவடைந்த ஒரு தொகுதி குளிபானங்களையும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் மீட்டுள்ளதாக என களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி அபூபக்கர் தெரிவித்தார்.
மேலும் போதை பாவனையற்ற நாட்டை உருவாக்குவேம் என்னும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் விசேட திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்கள் மூலம் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment