ஜெனீவா பிரேரணை மூலம் இலங்கையில் ஸ்தீரமின்மையை ஏற்படுத்துவதற்கு காரணம் காழ்புணர்ச்சியே !
தியாகத்தினால் பெற்ற வெற்றியின் மூலம் பாரிய அபிவிருத்தி இலக்குகளை முன்னெடுத்து வரும் இலங்கை தொடர்பில் காழ்புணர்ச்சியுடன் செயல்படும் ஒரு சில மேற்கு நாடுகள் ஜெனீவா பிரேரணை மூலம் நாட்டில் ஸ்தீரமின்மையை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றன. சவால்களை துணிவுடன் எதிர் கொண்ட அரசாங்கம் தற்போது தாயகத்திற்கு எதிராக விடுக்கப்படும் சவால்களை எதிர்கொள்ள தயார் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
களுத்துறையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது படையினரின் உயிர்த் தியாகம் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் துணிச்சலான தலைமைத்துவம் காரணமாக யுத்தம் நிறுத்தப்பட்டு சமாதானம் நாட்டில் உருவாக்கப்பட்டது. தற்போது பாரிய அபிவிருத்தி திட்டங்கள் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றன.
இதனை பொறுக்க முடியாத சில வெளிநாடுகள் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி பிரேரணைகளை நிறைவேற்றி அபிவிருத்தி திட்டங்களை ஸ்தம்பிக்க செய்வதற்கு முயற்சிக்கின்றன. இதனை மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். இனங்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தவும் மத ரீதியிலான குழப்பங்களை உருவாக்கவும் சர்வதேச சக்திகள் முணையும் இவ்வேளை மக்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டும்
0 comments :
Post a Comment