Saturday, March 15, 2014

வடக்கு கிழக்கில் உள்ள ஆண்களும் இராணுவத்தில் இணைந்து கொள்ள முடியும்- இராணுவப் பேச்சாளர்

உரிய தகுதியுடைய வடக்கு கிழக்கைச் சேர்ந்த இளைஞர்கள் விரும்பினால் வெற்றிடம் ஏற்படும் போது இராணுவத்தில் இணைந்து கொள்ள முடியும் இதற்கு தடையேதும் இல்லை என்பதுடன் இலங்கை இராணுவத்தில் எந்தவொரு இலங்கைப் பிரஜையும் இணைந்து கொண்டு கடமையாற்ற முடியும் என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு இணைந்து பணியாற்றுவதற்கு கல்வி மற்றும் தேவையான உடல் தகுதிகளைக் கொண்டிருத்தல் மட்டுமே அவசியமானது என்பதுடன் எந்தவொரு இனத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டுக்கு முன்னதாக புலிகள் வடக்கு கிழக்கு இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்து கொள்வதனை தடுத்து வந்தனர் எனினும், இந்த உத்தரவுகளை நிராகரித்த சில வடக்கு கிழக்கு பிரஜைகள் இராணுவத்தில் இணைந்து பாரியளவில் தியாகம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com