தேர்தல் முடிவுகள்! (இரண்டாம் இணைப்பு)
தென் மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டத் தேர்தல் முடிவுகள் மட்டுமே நல்லிரவிலிருந்து இக்கணம் (இலங்கை நேரம் 8.27) வரை அறிவிக்கப்பட்டுள்ளன.
ஹம்பாந்தோட்டையில் அரசாங்கம் எதிர்பார்த்த்தைப் போல, பாரிய வெற்றியை சுவீகரித்துக் கொண்டுள்ளது. இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 8 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 2 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
அதேபோல, ஐக்கிய தேசியக் கட்சி மாத்தறை மாவட்டத்தில் எதிர்பார்த்த வெற்றி கனவாகவே மாறியுள்ளது. இங்கும் ஐக்கிய மக்கள் முன்னணி - ஆளுங்கட்சியே வெற்றியீட்டியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 10 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 2 ஆசனங்களையும், ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் இங்கு பெற்றுள்ளன.
இதன்படி, தென் மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முதலிடத்திலும், ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாம் இடத்திலும், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. ஜனநாயகக் கட்சி நான்காவது இடத்தில் இருக்கின்றது.
மாத்தறை மாவட்டத்தில் ஜேவிபி எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்கவில்லை என்றே சொல்லத் தோன்றுகின்றது.
மேல் மாகாணத தேர்தல் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. என்றாலும், அங்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே முன்னணியில் உள்ளது என தெரியவருகின்றது.
அனைத்து முடிவுகளும் அறிவிப்பதற்கு இன்று நண்பகலும் தாண்டும் என ஊகிக்கலாம்.
0 comments :
Post a Comment