ரணிலை இரு கண்கள் போல பார்த்துக் கொள்ள வேண்டும்… பாவம் அவர்… யாரேனும் அடித்துவிட்டால்…? - நாமல்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, அந்த அப்பாவி மனிதனுக்கு எந்த நேரத்தில் அடித்துவிடுவார்களோ தெரியாது… எனவே அவருக்கு பாராளுமன்றில் இன்னும் பாதுகாப்பு வழங்க நான் பிரேரிக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
“எல்லா இடங்களிலும் குண்டு வெடிக்க வைத்தால்… பாடசாலைகளைக் கட்டியெழுப்பாமல் பணம் படைத்தவர்கள் மாத்திரம் படிப்பதற்கு ஆவன செய்து, மற்றவர்களுக்கு விருப்பமென்றால் படிக்கவும் இல்லாவிட்டால் சும்மா இருக்கவும் எனச் சொன்னால்… கிராமப்புற வீதிகளை சரிசெய்யாமல் அந்த காட்டில் சேனைப் பயிர்ச்செய்கை செய்யுங்கள் எனச் சொன்னால்… கிராமப்புறப் பிள்ளைகளுக்கு மின்சாரம், தண்ணீர் கொஞ்சம் கொடுக்காமல் மண்ணெய் விளக்குகளில் இருந்துகொண்டு, குடத்திலாவது தண்ணீர் அள்ளிக் குடியுங்கள் எனச் சொன்னால்… இன்று மகிந்த ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு, பிரித்தானியாவுக்கு நல்ல தலைவராகக் காட்சியளிப்பார்.
அவ்வாறின்றி, செய்த அபிவிருத்திப் பணிகள் மகிந்த ராஜபக்ஷவை போர்க் குற்ற நீதிமன்றிற்கு அழைத்துச் செல்கிறது. அவ்வாறாயின், இந்த தேர்தல் காலப்பிரிவில் ஜெனீவா தலைநகரிலிருந்துகொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் என்ன தெரியுமா இந்த மேல் மாகாணமும் பண்டாரகம மக்களும் எவ்வாறான முடிவினை எடுக்கிறார்கள் என.
இன்று எதிர்க்கட்சி பற்றிப் பேசப் போவதில்லை. ஏன் தெரியுமா இந்நாட்களில் இந்தத் தலைவரின் பாதுகாப்பே மிகவும் தேவையானது. கதிரை பறிபோகாமல் பாதுகாப்பது அல்ல வேலை. அடிபடாமல் பாதுகாப்பது. நாங்கள் பாராளுமன்றத்தினுள்ளும் அவருக்கு அதிபாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என சபாநாயகரை கேட்கவுள்ளோம். ஏன் தெரியுமா? எந்த நேரத்தில் யார்தான் இந்த அப்பாவியைத் தாக்குவார்களோ தெரியாது…! அவ்வாறான ஒரு கட்சிதான் இந்நாட்டின் தலைமைத்துவத்தை வேண்டிநிற்கிறது” எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment