யுத்த வெற்றி விழா நிகழ்வு இம்முறை மாத்தறையில்!
இலங்கையில் நடைபெற்ற 30 வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை கொண்டாடும் நிகழ்வு இம்முறை மாத்தறையில் நடைபெறவுள்ளது என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
யுத்த வெற்றியின் ஐந்தாம் வருட பூர்த்தியே இம்முறை மாத்தறையில் இடம்பெறவுள்ளதுடன் இந்த நிகழ்வில் முப்படைகளையும் சேர்ந்த 6000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டதை கொண்டாடும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் திகதியில் யுத்த வெற்றி கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment