இலங்கை விடயத்தில் எந்தவித போர்க்குற்றப் புலனாய்வும் தேவையில்லை… ! - ரஷ்யத் தூதுவர்
“ஸ்ரீலங்காவில் யுத்தக் காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல் தொடர்பில் உள்நாட்டு அல்லது சர்வதேச ஆய்வு நடத்தப்பட வேண்டும் என நாங்கள் ஒருபோதும் நினைக்க மாட்டோம். ஏன் என்றால், இலங்கை மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு பங்களிப்புக்களை, பாரிய கண்ணோட்டத்துடன் செய்துள்ளது. அதேபோல, யுத்தமின்றி இருக்கின்ற அன்று மிலேச்சத்தனமாக புலிகளினால் இலங்கையில் ஓட்டப்பட்ட இரத்த மழை, மிலேச்சனத்தன படுகொலைகள் இன்று இல்லை” என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அலெக்ஸாண்டர் கர்ஷாவா தெளிவுறுத்தியுள்ளார்.
கொழும்பு 07, ரஷ்ய கலாசார மையத்தில் கிரிமியாவுக்கு ஏற்பட்ட பாரிய குற்றத்தை மறைப்பதற்காக எடுத்துள்ள செயற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுறுத்தும் கலந்துரையாடலின்போது, ஊடகவியலாளர் ஒருவர் தொடுத்த வினாவுக்கு விடையளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கிரிமியா தொடர்பில் கருத்துரைக்கும்போது,
“ சோவியத் ரஷ்யா கூட்டாட்சி நடைபெற்ற காலகட்டத்தில் கிரிமியா யுக்ரேன் ஆட்சியின்கீழ் ஒன்றிணைக்கப்பட்டது. அன்று அது பாரிய பிரச்சினைக்குரிய விடயமாக இருக்கவில்லை. ஆயினும், சோவியத் ரஷ்யா துண்டாடப்பட்டபோது, சுயாதீன அரசாங்கங்கள் 15 உருவாகின. யுக்ரேன் இரண்டாவது பாரிய சுயாதீன அரசாங்கமாக மாறியது. அது ரஷ்யாவுக்கு மட்டுமே இடண்டாந் தரமானது. அதனால் சுயாதீனத்தை கேட்டுநின்ற கிரிமியாவை யுக்ரேன் தன் கட்டுப்பாட்டுக் கொண்டுவந்த்து. 1993 காலப்பகுதியில் கிரிமியா யுக்ரேனிலிருந்து விடுதலையாகி ரஷ்யாவுடன் இணைந்துகொள்ள வேண்டும் என கிரிமியா மக்கள் கேட்டுநின்றனர். அதற்கேற்ப, அவர்கள் மீண்டும் நேற்று முன்தினம் கிரிமியாவின் முழு வாக்கெடுப்பு வலயங்களில் 82% மும், மொத்த வாக்காளர்களில் 96% வீதமும் ரஷ்யாவுடன் மீண்டும் இணைந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டனர். அதற்கேற்ப, அவர்கள் ரஷ்யாவுடன் மீண்டும் இணைந்து வரலாற்று ரீதியான குற்றத்திலிருந்து - தப்பினை உணர்ந்து மீண்டுவந்துள்ளனர்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
யுக்ரேன் விடயத்தில் ரஷ்யா அவசிமற்றமுறையில் தலையிடுமா? என ஊடகவியலாளர் ஒருவர் தொடுத்த வினாவுக்கு விடையளிக்கும்போது, “நாங்கள் யுக்ரேனின் உள்நாட்டு விடயங்களில் ஒருபோதும் தலையிட மாட்டோம். அவர்களின் சுயாதீன முறைமையை நாங்கள் மதிக்கிறோம். அவர்களுடனான ஒப்பந்தத்திற்கு பங்கம் ஏற்படாமல், அதனைக் கட்டிக் காப்பதற்கு நாங்கள் முழு முயற்சியுடன் ஆவன செய்வோம்….” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment