Sunday, March 30, 2014

நடு நிலை வகிப்பதென்பது தூர விலகி நிற்பதில்லை- துணைத் தூதுவர் வி.மகாலிங்கம்

நடு நிலை வகிப்பதென்பது தூர விலகி நிற்பதற்கான அர்த்தமில்லைஎன்பதுடன் நாங்கள் உங்களுடன் இருந்து உங்கள் தேவையை, உரிமையை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதே நடுநிலையாகும் யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் வி.மகாலிங்கம் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் வாக்கெடுப்பில் கலந்த கொள்ளாத இந்தியா, நடுநிலையாகச் செயற்பட்டமை தமிழ் மக்களுக்கு கவலையளிப்பதாகவும், இந்தியா ஏமாற்றி விட்டதாகவும் சுட்டிக்காட்டியதற்குப் பதிலளிக்கும் போதே மகாலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் வி.மகாலிங்கம் யாழிலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்வதனை முன்னிட்டு பிரிவுபசாரம் வழங்கும் நிகழ்வு, இந்து சமயப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ். பலாலி வீதியில் அமைந்துள்ள மேற்படி பேரவையில் நடைபெற்றபோது உரையாற்றுகையிலேயே மகாலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு இந்தியா பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது அதேபோன்று தொடர்ந்தும் பல்வேறு உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment