காணாமல் போன முஸ்லிம்களின் பிரேதங்களை தோண்டியெடுத்து முறைப்படி அடக்கம் செய்க! - சிப்லி பாரூக்
காத்தான்குடியில் காணாமல் போனோர்களின் சிவில் அமைப்பினர் நேற்று (24) கொழும்பில் உள்ள ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோர் கமிசனின் அலுவலகத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பில் உள்ள பிரநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இச்சந்திப்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் மற்றும் காணாமல் போனோர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.நேற்று முன்தினம் காணாமல் போனோர் ஆணைக்குழு மட்டக்களப்பு சென்று களுவாஞ்சிக்குடியில் குருக்கள்மடத்தில் விடுதலைப்புலிகளால் முஸ்லிம்களை கடத்தி கொலைசெய்து புதைக்கப்பட்ட பிரதேசத்தினை பார்வையிட்டனர்.
அதன் பின்னர் இன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆணைக்குழுவுக்கு விசேட பிரதிநிதியைக் கொண்டு காணமல் போனோர்களை எவ்வாறு அடையாளம் காணுதல், டி.என்.ஏ பரிசோதனை, எச்சங்கள் அவர்களது வயது எலும்புக் கூடுகள் புதைக்கப்பட்ட இடத்தை விசாரணை முடியும் வரை எவ்வாறு பாதுகாப்பது போன்ற பல தகவல்களை கொண்ட விரிவுரையொன்றும் இடம்பெற்றது.
இதில் இந்த கமிசனில் உள்ள சகல உத்தியோகத்தர்களும் காத்தான்குடி சிவில் அமைப்பினரும் கலந்து கொண்டனர். இங்கு சமுகம் தந்திருந்த செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகளிடம் காத்தான்குடியில் காணாமல் போனோர்களது பிரேதங்களை தோண்டி எடுக்குமாறும், அதனை இஸ்லாமிய முறைப்படி அடக்குவதற்கும், ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற்று இவ்வேலைத் திட்டத்தினை ஆரம்பிக்கும்படியும் சிப்லி பாரூக் வேண்டுகோள் விடுத்தார்.
இவ்விடயம் சம்பந்தமாக இக்குழு கடந்த வருடம் கமிசனிடம் அறிக்கை சமாப்பித்திருந்தது. அதன் பின்னர் முறைப்பாட்டு விசாரணைகளை தெரிவித்திருந்தது. அதன் பின் கமிசனை மட்டக்களப்புக்கு அழைத்துச் சென்று முஸ்லிம்கள் புதைக்கப்பட்ட இடங்களை காண்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
(அஸ்ரப் ஏ சமத்)
0 comments :
Post a Comment