ஐக்கிய நாடுகள் அமையத்தின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் இலங்கைக்கு எதிராக பிரேரணையை நிராகரிப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.
பிரான்ஸ் செய்தி நிறுவனமொன்றுக்கு கருத்துரைக்கும் போது, இலங்கைக்கெதிரான சதித்திட்டங்கள் மேலெழுந்து வருவதாகக் குறிபிப்பிட்டுள்ளார்.
வெற்றிபெற்றுள்ள பிரேரணை இந்நாட்டுக்கு உகந்ததல்ல எனவும், அதனால் எந்தவொரு நன்மையும் ஏற்படப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, இவ்விடயத்தில் தான் ஒருபோதும் தைரியமிழக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்காதிருந்தமை தமக்கு தைரியத்தை வரவழைத்துள்ளதாகவும், இலங்கையின் மீள்கட்டியெழுப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
No comments:
Post a Comment