பாடசாலை நிகழ்வுக்கு பூப்பறிக்கச்சென்ற சிறுவன் குளத்தில் மூழ்கி பலி!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரத்தினை சேர்ந்த 16வயதுடைய ச.அரவிந்தன் என்ற சிறுவன் ஒருவன் நேற்று(13.03.2013)வியாழக்கிழமை பிற்பகல் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலையில் நடைபெறும் நிகழ்வு ஒன்றுக்காக தும்பங்கேணி குளத்தில் அல்லிப்பூ பறிக்கச்சென்றபோதே இந்த விபரீதம் நடைபெற்றுள்ளதுடன் குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணையை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
0 comments :
Post a Comment