ஹக்கீமை வாய்பொத்தச் சொல்கிறார் ஜனாதிபதி...
அரசாங்கத்தோடு தொடர்ந்து செயற்பட முடியாதுவிட்டால், அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஜனாபதி அவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று தெரிவிக்கிறது.
ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே ரவூப் ஹக்கீம், இலங்கைக்கு எதிராக பல மனுக்களை அனுப்பியிருப்பது தொடர்பில் நே்ற்று முன்தினம் விவாதிக்கப்பட்டது. அவரது செயற்பாடு தொடர்பில் காரசாரமாக கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இருந்தபோதும் அது தனிக்கட்சி என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு குறிப்பிட்டது மேலும் கருத்தாடலை சூடாக்கியு்ளளது. அப்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ரவூப் ஹக்கீமிடம் தொடர்ந்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியாதுவிட்டால், அரசாங்கத்திலிருந்து நீங்கிச் செல்லுங்கள் என்று உரத்துச் சொல்லிவிட்டு, கூட்டத்திலிருந்து எழுந்து சென்றுள்ளார்.
(கேஎப்)
Think today, decide tomorrow.
ReplyDeleteDon,t wait for long.
பச்சோந்திகள் நிறம் மாறும் அல்லவா? என்ன நடக்கிறது என்று பொறுத்தான் பார்ப்போமே!
ReplyDelete