Friday, March 28, 2014

வீட்டுத்திட்டம் வேணுமா பாய்க்கு வாங்க என பாய் போட்டு திரிந்த கிராம அலுவலருக்கு அதிர்ச்சி வைத்தியம்

வவுனியா, செக்கட்டிப்புலவு கிராம அலுவலர் சிறிகாந்தன் இந்திய வீட்டுத்திட்டம், மின்சார இணைப்பு, குடும்ப பதிவு அட்டை ஆகியவற்றை பெறச் செல்பவர்களிடம் 5000 முதல் 50,000 வரை லஞ்சம் கோரியுள்ளதுடன், பெண்களை பாய்க்கு வருமாறும் கூறி தவறாக நடந்தும் கொண்டுள்ளார் என மக்கள் ஆதாரங்களை எமக்கு அனுப்பி வைத்ததைத் தொடர்ந்து எமது இணையம் அதனை ஆதாரத்துடன் வெளியிட்டது.

குறித்த கிராம அலுவலருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் வலுவானவை என பலதடவை எமது இணையம் சுட்டிக்காட்டியிருந்தது. இந் நிலையில் மாவட்ட செயலகத்தில் அவருக்கு எதிராக விசாரணைகள் நிறைவடைந்துள்ளது. குறித்த கிராம மக்கள் அக் கிராம அலுவலரை உடனடியாக மாற்றுமாறு கோரி கடந்த புதன்கிழமை பிரதேச செயலகம் முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர் ஆகியோருக்கும் மகஜர் வழங்கப்பட்டது. இதனால் குறித்த கிராம அலுவலருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவரது நிர்வாகத்தின் கீழ் இருந்த அனைத்து கிராமங்களும் பறிக்கப்பட்டு அவர் தற்போது மாவட்ட செயலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பாய் போட்டுத் திரிந்த கிராம அலுவலர் தமது கிராமத்தில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து கிராம மக்கள் தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com