என் தந்தையை கொன்றது அரசாங்கம் அல்ல! - ஹிருணிகா
தற்போதுள்ள நீதிமன்றங்களின் மூலம் அநீதியே நிகழ்கிறது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை வேட்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிடுகிறார்.
எந்தவொரு அரசியல் கொள்கையுடன் இருந்த போதும், தான் ஒருபோதும் சத்தியத்தைப் பேசுவதற்கு பின்நிற்பதில்லை எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
அவரது சொந்த இணையத்தளத்தை கொழும்பில் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
தனது தந்தையின் கொலைக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியது அரசாங்கம் அல்ல. தனது தந்தையின் கொலை தொடர்பில் நீதியான தீர்ப்பு வழங்கப்படும் வரை தான் காத்திருப்பதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment