ஜெனிவா தீர்மானத்தி்ற்கு எதிராக கல்முனை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்ட பேரணி.
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் நிறைவேற்றப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதியையும், நாட்டையும் ஆதரித்தும் கல்முனை பிரதேச முஸ்லிம் மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணி இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.
கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் ஆரம்பமான இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் கல்முனை பிரதான வீதியூடாக பிரதேச செயலகம் வரை சென்று பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபாவிடம் அம்பாரை அனைத்து பள்ளிவாசல்கள், பொது நிறுவனங்களின் தலைவர் டாக்டர்.எஸ்.எம்.ஏ.அஸீஸ் மகஜரை கையளித்தனர்.
கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல், கல்முனை அன்சார் சுன்னத்துல் முகம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல், இஸ்லாமபாத் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியன உட்பட 21 பள்ளிவாசல்கள், 3 வர்த்தக, கைத்தொழில் அமைப்புக்கள், 22 சமூக சேவை முன்னெடுப்பு அமைப்புக்கள், 45 விளையாட்டுக் கழகங்கள் மற்றும் ஏனைய பிரதேச அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இஸாக்
0 comments :
Post a Comment