நாங்கள் வடக்கில் சிங்கள, முஸ்லிம் மக்களை மீளக்குடியேற்றுவதை பொறுக்கமுடியாமல் சிலர் துள்ளுகிறார்கள்...! - ஜனாதிபதி
புலிப் பயங்கரவாதிகளால் போர்க் காலப் பிரிவில் வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சிங்கள, முஸ்லிம்களை வடக்கில் மீளக் குடியேற்றுவது தொடர்பில் அரசியல்வாதிகள் சிலருக்கும், வெளிநாட்டு முகவர்கள் சிலருக்கும் பெரும் பிரச்சினையாகி உள்ளது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.
கல்கிஸ்ஸவில் இடம்பெற்ற பொதுமக்கள் பேரணியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
“இந்நாட்டில் பயங்கரவாதிகளால் துன்பத்தைச் சுமந்த மக்கள் இருக்கிறார்கள். 30 வருடங்கள் பயங்கரவாதத்தில் சிக்கித் தவித்தோம். ஸ்ரீமா போதிக்கும், தலதா மாளிகைக்கும் தாக்குதல் நடாத்தினார்கள். அன்று பல பௌத்த மதகுருமார்கள் கொல்லப்பட்டார்கள். காத்தான்குடியில் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை கொன்றொழித்தனர். அன்று அவ்வாறானதொரு சமுதாயம் இருந்தது.
மக்கள் சுதந்திரமாக வாழ்வதை விடவும் மனித உரிமை ஒன்றில்லை. இன்று மனித உரிமைகள் பற்றிப் பேசுகிறார்கள். தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் இந்நாட்டில் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழும் உரிமையை எங்களால் பெற்றுக் கொடுக்க முடிந்தது. எனவும் அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment