மாயமான மலேசிய விமானம் அந்தமான் தீவுகளை நோக்கி பயணித்ததாக தகவல்!
மாயமான மலேசிய விமானம் மலாய் தீபகற்பத்தின் மேலே அந்தமான் தீவுகள் பகுதியை நோக்கி பயணம் செய்தாதாக ராணுவ ரேடார் கண்காணிப்பு பதிவுகள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைவர் பீஜிங்குக்கு கடந்த சனிக்கிழமை அதிகாலை 239 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற மலேசிய விமானம், 2 மணி நேரத்தில் மாயமானது. இதையடுத்து அந்த விமானத்தை 6 நாட்களாக தேடும் பணி நடைபெற்று வருகிறது. மாயமான விமானத்தை தேடும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, வியட்நாம் உள்பட 12 நாடுகளை சேர்ந்த 42 கப்பல்கள், 39 விமானங்கள் ஈடுபட்டுள்ளன.
இருப்பினும், மலேசிய விமானம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. அந்த விமானம் விபத்துக்குள்ளானதானா? தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா? அல்லது நாசவேலையால் சிதைக்கப்பட்டதா என பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் அமெரிக்காவின் பாதுகாப்பு நிறுவனமான பென்டகனும் ஈடுபட்டு வருகிறது.
இந்த விமானம் ராடார் தொடர்பை இழந்த பின்பும் பல மணி நேரங்கள் செய்கோள் ஒன்றுக்கு தகவல்களை அனுப்பிக்கொண்டிருந்ததாக சில அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்ததிருந்தன. ஆனால், 'புதிதாக குறிப்பிடத்தக்க துப்பு எதுவும் கிடைக்கவில்லை, புதிய கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது' என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜே கார்னி தெரிவித்துள்ளார்.
சீன அரசு செய்தி நிறுவனம், சீன நிலநடுக்க இயல் மற்றும் ஆராய்ச்சி குழு, கடந்த சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 5 மணிக்கு மலேஷியா மற்றும் வியட்நாம் இடையே கடல் ஒரு "பூகம்பம் அலை" கண்டறியப்பட்டது என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்கக் கடற்படைக் கப்பலான யுஎஸ் எஸ் கிட் தாய்லாந்து வளைகுடாவிலிருந்து மலேசியாவின் மேற்குக் கடற்கரைக்கு விரைகிறது என்று அமெரிக்க கடற்படை அறிவித்திருக்கிறது. இந்நிலையில், மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலுக்கு அடியில் இருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.
இதனிடையே மாயமான மலேசிய விமானம் மலாய் தீபகற்பத்தின் மேலே அந்தமான் தீவுகள் பகுதியை நோக்கி பயணம் செய்தாதாக ராணுவ ரேடார் கண்காணிப்பு பதிவுகள் தெரிவிப்பதாக விசாரணை அதிகாரிகள் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போன விமானம் குறித்த விவரம் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தெரியவரும் என்றும் மலேசிய சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
...............................
0 comments :
Post a Comment