நீர்கொழும்பில் அமைந்துள்ள நகை கடையில் துப்பாக்கி முனையில் இரண்டு கோடி ரூபாவுக்கு அதிகமான பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு, கிம்புலாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த கெசீனா என்பவரையே நேற்று காலி நகரில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும், நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவரும், ரொயிஸ் விஜித்த பொர்னாந்து கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். இவர் தற்போது மூன்று மாத தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் நீர்கொழும்பு, பெரியமுல்லையைச் சேர்ந்த முஹம்மத் இர்சாத் மற்றும் கிம்புலாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த தரிந்து சாமதின் கொஸ்தா ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்க்கது.
கடந்த 17ம் திகதி குறித்த வர்த்தக நிலையத்தில் வியாபார நடவடிக்கை இடம் பெற்றுக் கொண்டிருந்த போது, ஹெல்மட் மற்றும் ஜக்கட் அணிந்த இரண்டு பேர் கடையில் நுழைந்து நகை கடையின் காவலாளியை முதலில் தாக்கியுள்ளனர். பின்னர் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரையும் கடையிலிருந்தவர்களையும் ஒருவர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்த மற்றையவர் பணத்தை கொள்ளை யிட்டனர். அதன் பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றிருந்தனர்.
No comments:
Post a Comment