இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ் விமானம் குவாலியர் அருகே விபத்துக் குள்ளானது. இந்த விபத்தில், விமானி உட்பட 5 பேர் பலியாகினர். மத்தியப்பிரதேசம் குவாலியர் அருகே இந்திய விமானப் படை சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்திக்குள்ளானது.
ராஜஸ்தானின் மத்திய பிரதேச எல்லையில் உள்ள கரோலி என்ற இடத்தில் சி-130 ஜெ விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விமான விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்தில் பயணம் செய்த விமானி உட்பட 5 பேரும் பலியாகியுள்ளனர். சம்பவ இடத்திற்கு கரோலியின் காவல்துறை கண்காணிப்பாளர் விரைந்துள்ளார். விபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய விமான இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் இந்தியா சி-130ஜெ ரக சூப்பர் ஹெர்குலஸ் விமானத்தை அமெரிக்காவிடமிருந்து ரூ.6000 கோடிக்கு வாங்கி அதனை இந்திய விமானப் படையில் இணைத்தது என்பது குறிப்பிடதக்கது. விபத்து குறித்து விமானப்படை உயர் அதிகாரிகள் கூறுகையில் :- இது திடீரென நிகழ்ந்துள்ள சம்பவம். விபத்துக்கான காரணம் குறித்து அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்
இந்த விமானத்தை பயன்படுத்தி அதிரடி நடவடிக்கைகள் எடுக்க முடியும். கடந்த 08.03.2014 அன்று மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியில் இந்த விமானம் ஈடுபடுத்தப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பது விமானப் படை அதிகாரிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment