சனல் 4 வானது கெலுமையும் அவரது பத்திரிகையின் அவதூறுகளையுமே வெளிக்காட்டுகின்றது
சனல் 4 வின் கானொளி தொடர்பாக பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் டாக்டர் கிரிஷ் நொனிஸ், பதிலளிக்கும போது, ஜெனீவாவில் ஐ.நா கூட்டத் தொடர் இடம் பெற்றுவரும் இவ்வேளை சனல் 4 வின பத்திரிகைத் துறையானது கெலுமையும் அவரது பத்திரிகையில் உள்ள அவதூறுகளையும் வெளிப்படுத்தும் தன்மையினையே வெளிக்காட்டுகின்றது என கூறினார்.
2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புலிகள் மீது இலங்கை இராணுவத்தினரால் புரியப்பட்டதாக குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக சனல் 4 ஆவனத்தயாரிப்பாளர் கெலும் மக்ரேமீதே அவர் மேற்கோள் காட்டி கூறினார்.
சனல் 4 வின் அனைத்து குற்றச்சாட்டுக்களும் ஆதாரமற்றதும் அடிப்படை யில்லாததுமான வெறுமனே பரிசில்களை பெறும் நோக்கில் செயற்படுவதனால் பத்திரிகை துறையை மேலும் சாக்கடையாக்குகின்றன. இலங்கையை இழிவுபடுத்துவதற்காக உங்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகளில் இறுதி முயற்சி கூட ஏற்கனவே புத்தகத்தில் வெளியாகியுள்ளன என கிரிஷ் நொனிஸ் குறிப்பிட்டார்.
இரட்டைவேடங் கொண்ட உங்களது பத்திரிகை துறையானது, இலங்கைக்கெதிரான தொடரும் பரப்புரைகள் மூலம் முன்று தசாப்த கால நீண்ட யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்ததையடுத்து மேற் கொள்ளப்படும் நல்லிணக்க செயற்பாட்டை குறைத்து மதிப்பிடுவதாக அமைகின்றது என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment