Saturday, February 1, 2014

எல்ரீரீஈ யால் ஒரே இரவில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடரபில் சர்வதேசம் ஏன் வாய் திறப்பதில்லை!

எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளால் ஒரே இரவில் வடக்கிலிரு ந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாக இன்றும் புத்தளத்தில் வாழ்ந்து வருவது தொடரபில் சர்வதேசம் ஏன் வாய் திறப்பதில்லையென அமைச்சர் பெஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் இவர்களுக்கு உதவ சர்வதேச சமூகம் முன்வரவில்லை என்பதுடன், மக்களை மீண்டும் மீள்குடியேற்றுவதற்கும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ப துடன் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகள், மூதூர் முஸ்லிம்களையும் விரட்டியடித்தனர் எனினும் உடனடியாக செயற்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எல்ரீரீஈ பயங்கரவாதிகளை விரட்டியடித்துடன் மாவிலாறு பகுதியையும் , மூதூரையும் மீட்டெடுத்து உடனடியாகவே மக்களை மீண்டும் மூதூரில் மீளக்குடியேற்றப்பட்டனர் என்பதை அனைவரும் அறிவார்கள் எனத் தெரிவித்தார்.

இது மட்டுமல்லாது காத்தான்குடி பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது எல்ரீரீயினர் துப்பாக்கி பிரயோகம் செய்தனர் என்பதுடன் அந்த துப்பாக்கி தடயங்கள் இன்றும் குறித்த பள்ளிவாசலில் காணப்படுகின்றது என்பதுடன் அன்று இருந்த நிலைமை இன்று மாற்றப்பட்டுள்ளதுடன் முஸ்லிம்கள் தற்போது நிம்மதியாகவும், சமாதானமாகவும் வாழ்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் இன்று காணப்படும் சுதந்திரமான சூழல் ஆனது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மேற்கொண்ட உறுதியான தீர்மானத்தின் காரணமாகவே உருவாகியது எனவும் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் பெஷில் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com