கைத்தொலைபேசியை அதிகம் உபயோகிக்கூடாது என்றும், அதனால் ஏற்படும் தீமைகள் பற்றியும் மாமாவொருவர் அறிவுறுத்தியதை சகிக்கமுடியாமல் மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தொடங்கொட லூல் எல எனும் இடத்தில் வசித்துவந்த 17 வயதுடைய அஸான் சஞ்சய எனும் மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நடைபெற்றுமுடிந்த க.பொ.த ச.த பரீட்சைக்குத் தோற்றி, பெறுபேறுக்காக காத்திருந்தவர் மேற்படி மாணவர்.
கைத்தொலைபேசி உபயோகித்தல் தொடர்பில் குறித்த மாணவனின் மாமா ஒருவர் புத்திமதி கூற, அதைச் சகிக்க முடியாமல், கடிதம் ஒன்று எழுதவிட்டு, வீட்டிலிருந்த புடைவையொன்றை உபயோகித்து, முகட்டின்மீது மாட்டி, தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இத்தற்கொலை கண்டவுடனேயே குறித்த மாணவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆயினும், உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சுகத் கலகமகேவின் ஆலோசனையின் பேரில் தொடங்கொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஜீ. குணதிலக உட்பட பொலிஸார் பலரும் இவ்விடயம் தெ்ாடர்பில் பரிசீலனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(கேஎப்)
No comments:
Post a Comment