Saturday, February 1, 2014

‘அடுத்தவர் பிரச்சனையில் அமெரிக்கா மூக்கை நுழைக்கிறது’: ஜீ. எல் பீரிஸ்

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் செயற்பாடுகள் ‘அடுத்தவர் விடயத்தில் மூக்கை நுழைப்பதாகவும், போதனை செய்வதாகவும்’ இருப்பதாக மூன்று நாள் விஜயமாக, இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி வெளியுறவுச் செயலர் நிஷா பிஸ்வாலிடம் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ. எல் பீரிஸ் கூறியுள்ளார்.


‘யுத்தத்தின் பின்னரான சூழலில் கிடைத்துள்ள பொன்னான சந்தர்ப்பத்தை இலங்கை இழந்துவிடும் என்று சர்வதேச சமூகத்தின் மத்தியில் அச்சம் அதிகரித்துவருவதாக’ அமெரிக்காவின் உதவி வெளியுறவுச் செயலர் நிஷா பிஸ்வால், தம்மிடம் கூறியதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போரின் வடுக்களை ஆற்றுவதில் இலங்கை வேகமாக இயங்கவில்லை என்றும், இந்த ஆறாத வடுக்கள் மீண்டும் மோதல்களை தோற்றுவிக்கக்கூடும் என்றும் அமெரிக்க உதவி வெளியுறவுச் செயலர் சுட்டிக்காட்டியதாக வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், இலங்கையில் மீண்டும் மோதல் ஏற்படுவதை மக்கள் விரும்பவில்லை என்றும் ‘அமெரிக்காவின் செயற்பாடு அடுத்தவர் விடயத்தில் மூக்கை நுழைக்கும் வேலை என்றும், ஊருக்கு உபதேசம் செய்வது என்றும்’ கூறியுள்ளார்.

இலங்கைக்காக சுட்டிக்காட்டப்படும் ஏற்பாடுகள் அனைத்தையும் அமெரிக்கா ஏன் மற்ற நாடுகளின் விவகாரத்தில் கைக்கொள்ளப் படுவதில்லை என்பதுடன் மறற நாடுகளைப் போல் இலங்கையையும் சமமாக நடத்தப்படவில்லை என்று நிஷா பிஸ்வாலிடம் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார் என இலங்கையின் வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com