இலங்கை அரசும் மக்களும் மேற்கொள்ளும் முயற்சிகளை உலக நாடுகள் மதிக்க வேண்டும் – ஹுவா சுன்னியிங்!
அபிவிருத்தியின் பாதையை சுதந்திரமாக தெரிவு செய்யவும், ஸ்தீரத்தன்மை மிக்க வளமான நாட்டை உருவாக்குவதற்கான புறச்சூழலை உருவாக்கவும் இலங்கை அரசும் மக்களும் மேற்கொள்ளும் முயற்சிகளை உலக நாடுகள் மதிக்க வேண்டும் என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்னியிங் தெரிவித்துள்ளார்.
ஜெனிவா விவகாரத்தில் இலங்கைக்கெதிராக பல நாடுகள் அழுத்தங்கள் கொடுத்து வருகின்றமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் ஜெனீவா பிரேரணை தொடர்பாக சர்வதேச நாடுகள் இலங்கைக்கெதிரான அழுத்தங்களை பிரயோகித்து வருவது சரியான விடயமல்ல ஏன் எனில் இலங்கையின் உள்விவகாரங்களை கையாள்வதற்கான அறிவும் திறமையும் அந்நாட்டு மக்களிடம் உள்ளது.
சமத்துவம், பரஸ்பர புரிந்துணர்வு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நாடுகளின் மனித உரிமை நடவடிக்கைகளில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன என்ற கருத்தை சீனா எப்போதுமே கொண்டுள்ளது.
எனவே இலங்கையின் இறைமை, தேசிய பாதுகாப்பு, மற்றும் எல்லை கூறுபடாநிலை என்பவற்றுக்கு எப்போதும் சீனா ஆதரவளிக்கும் என்பதுடன் இலங்கை சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் கடல் தொடர்பான பல நட்புறவு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்பதுடன் இருநாடுகளும் இணைந்து 21ஆம் நூற்றாண்டின் கடற்மார்க்கத்தை உருவாக்கவுள்ளது என அவர் தெரிவித்தார்.
சீன அமைச்சர் வாங்யிவின் அழைப்பையேற்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சீனத் தலைநகர் பெய்ஜிங் சென்று வந்ததைத் தொடர்ந்தே வெளிவிவகாரப் பேச்சாளர் மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment