Sunday, February 2, 2014

ஊடகவியலாளர் கத்தி குத்துக்குப் பலி!

கத்தியினால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் ஊடகவியாலளர் ஒருவரின் பிரேதமொன்றை தலங்கம பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பிரான்ஸ் செய்திச் சேவையுடன் சில காலங்கள் பணிபுரிந்த மெல் குணசேக்கர எனும் 36 வயதுடைய பெண் ஊடகவியலாளரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருக்கின்றார். இலங்கையிலுள்ள பல செய்தி நிறுவனங்கள் வர்த்தக செய்திகளை வழங்கக் கூடியவராகவும் அவர் இருந்திருக்கின்றார்.

வீட்டுச் சமையலறையில் இந்தக் கொலை செய்யப்பட்டிருந்தாகவும், அவரை நன்கு தெரிந்த ஒருவர் - அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்துசெல்லும் ஒருவர் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இந்த வீட்டுக்கு குறித்த கொலையாளி வரும்போது வீட்டு நாய் குரைக்காதிருந்திருப்பதன் காரணம் அந்த நாய்க்கு குறித்த நபர் நன்கு பழக்கப்பட்டவர் என்பதனாலாகும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com