இலங்கையில் முதலாவது காமா கதிர்வீச்சு நிலையம் பியகமவில் திறப்பு!
இலங்கையில் தொழில்நுட்பத் துறையில் புதிய அத்தியாயத்தைத் தோற்றுவிக்கும் முகமாக பியகம முதலீட்டு வலயத்தில் நிர்மாணிக்கப்படுள்ள முதலாவது காமா கதிர்வீச்சு நிலையத்தைப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (17.02.2014) திறந்து வைத்துள்ளார்.
இந்த நிலையத்தில் மரக்கறி, பழவகை, மருத்துவ உபகரணங்கள் ரப்பர் உற்பத்தி என்பவற்றின் ஊடாக கூடுதலான அநுகூலங்களைப் பெறுவதற்காக தொழில்நுட்ப, ஆராய்ச்சி, அணுசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இதற்கென்றே காமா கதிர்வீச்சு நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய கைத்தொழில்களை ஆரம்பிக்கவும் புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கவும் இதன் மூலம் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படுமென்பதுடன் உணவுப் பொருட்களை நெடுங்காலம் கெடாமல் பாதுகாத்து வைப்பதற்காக காமா கதிர்வீச்சு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment